Breaking

Thursday 15 February 2018

மனித உடல் ரகசியங்கள்

 மனித உடல் ரகசியங்கள்
மனிதன், பஞ்ச பூதங்கள் எனப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் தன்மையால் ஆனவன்.
மனிதன், குழந்தையாகப் பிறந்து நிலத்தில் உழல்கிறான்.
உணவுப் பொருள்களில் நீரைச் சேர்த்து, நெருப்பில் இட்டு சுவையாக அருந்தி, இதமாக வருடிச் செல்லும் காற்றைச் சுவாசிக்கிறான்.
சந்தோஷமாக,வளமான வாழ்க்கையில் தன்னை மறந்த நிலையில் அவன் ஆகாயத்தில் ஆனந்தமாகப் பறக்கிறான்.
ஒரு மனிதனை, பஞ்ச பூதங்கள் அரவணைத்துச் சென்றால் அவன் வாழ்கிறான் இல்லையெனில், நிலத்தில் சடலமாக வீழ்கிறான்.
ஒருவனுடைய உயிர், நீரோட்டம் போன்றது.
உயிரற்ற உடலை மண்ணில் புதைப்பதும், நெருப்பில் எரிப்பதும் நிகழ்கிறது.
மண்ணில் புதைத்தாலும்,எரித்தாலும் உயிரானது காற்றில் கலந்து, ஆகாயத்துக்குச் சென்றுவிடுகிறது.
உடலை வைத்துத்தான் இந்த உலகத்தில் நமக்கு இருப்பிடம்.
இதை எல்லோரும் உணர வேண்டும்.
ஒருவரின் லட்சியங்கள் எவ்வளவு உயர்ந்ததாக வேண்டுமானலும் இருக்கலாம்.
ஆனால் உடல் நலம் ஒத்துழைக்கவில்லை என்றால், பாதிக்கிணறு தாண்டிய கதைதான்.
எனவே, உடலைப் பாதுகாத்து, நோயில்லா நெறியை நமக்கு நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
உடல் என்பது, எலும்புகளை கை கால்களைப் போட்டு நீட்டி வைத்து, அவற்றின் ’இருப்பிடம்’ மாறிவிடாமல் இருக்க நுண்ணிய துவரங்களால் இணைத்து, நரம்புகளால் இழுத்துக் கட்டி, தோலால் மூடி, அவற்றுக்கு இடையே தசைகளைச் சேர்த்து, ரத்தத்தை ஊற்றி, உள்ளே வாயு எனப்படும் பிராணனை உள்ளடக்கி, உடல் என்ற ஓர் உருவம் உருவாக்கப்பட்டிருப்பதாக சித்தர் பாடல் நமக்கு விவரிக்கிறது.
"அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்"
அண்டமும் பிண்டமும் அறிந்து பார்க்கையில்  ஒன்றே !!!
என்பது சித்தர் மொழி.
இந்த பிரபஞ்சத்தில் உள்ளதுதான் நம் உடலிலும் இருக்கிறது.
நம்முடைய உடலில் உள்ளதுதான் இந்த அண்ட வெளி முழுவதும் இருக்கிறது என்று அர்த்தம்.
எனவே, உடலுக்கு ஏதாவது கேடு ஏற்பட்டால், உலகில் காணும் தாவர வர்க்கங்களை, ஜீவ வர்க்கங்களை மருந்தாக்கித் தேகம் நிலைக்கச் செய்ய வேண்டும் என்பது சித்தர்களின் வாக்காகும்.
பல கோடி ஆண்டுகளாக இந்த உலகமும், மனித வர்க்கமும் இருந்து வருகின்றன.
மனிதன் இறப்பதற்காகப் பிறப்பவன்.
இடையில் அவன் வாழ்க்கை என்பது சமூகப் பரிணாம வளர்ச்சிக்காக, இறைவன் தந்த படிப்பினை.
எனவே, பிறந்த மனிதன், வளர்ந்து, வாழ்ந்து நோய்வாய்ப்பட்டு மடிந்தே ஆக வேண்டும்.
நோயால் இடையில் மடிவதை, அதாவது வாசியின் இலக்கு அடையும் முன் மடிவதை இறைவன் விரும்பமாட்டான்.
இந்த உலகில் தோன்றியதன் நோக்கத்தைச் சாதிக்கும் பொருட்டு, நம் உடலுக்குச் சக்தி தேவை.
அத்தகைய உயிர்ச்சக்தியை சித்தர்கள் அருளிய மூலிகைகள் நமக்கு அளிக்கின்றன.
எனவே, இறைவன் நமக்கு அளித்த அரிய வரம், இந்த உடல், நல்ல பழக்கவழக்கங்களால் இந்த உடலை இந்த உலகில் நிலைநிறுத்தி, காரியமாற்றி, இலக்கை அடைவோம்.
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"
"தன்னை உணர்வதே முடிவான இலட்சியம்"
"குருவே துணை"
''குருவே வழிகாட்டி "
"குருவே சத்தியம் "

No comments:

Post a Comment

Pages