Breaking

Friday 9 February 2018

முருங்கை இலையின் மருத்துவ பயன்கள்

முருங்கை இலையின் மருத்துவ பயன்கள்
முருங்கை முழுத் தாவரமும், கசப்பு , துவர்ப்பு, மற்றும் இனிப்பு சுவைகள் கொண்டது. குளிர்ச்சித் தன்மையானது.
முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன.
முருங்கை கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை குணமாகும்.
உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை முருங்கைகீரை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.
முருங்கை இலை சாறு இரத்தசுத்தி செய்வதுடன், எலும்புகளையும் வலுப்படுத்தும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும். தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். முருங்கை இலைச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.
ஆஸ்துமா, மார்சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை ரசம் அல்லது சூப் மிகவும் நல்ல பலன் தரும்.
பித்த மயக்கம், கண் நோய், சொரிய மாந்தம் முதலியவை நீங்கும். இருமல், குரல் கம்மல், தொண்டை தொடர்பான நோய்களை நீக்குவதிலும் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. மலச்சிக்கலை போக்கும். மெலிந்த தேகம் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும்.
முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது. முருங்கை கீரை சாப்பிடாதவர்கள் முருங்கை இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் சாம்பார் போண்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம். தினமும் 8 முதல் 24 கிராம் முருங்கைப்பொடி உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும்.

No comments:

Post a Comment

Pages