Breaking

Wednesday 6 June 2018

1300 வருடங்களாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை; அறிவியலை மிஞ்சிய அதிசயம்!

1300 வருடங்களாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை; அறிவியலை மிஞ்சிய அதிசயம்!
1300 ஆண்டுகள் நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை அறிவியலை அதிரவைத்துள்ளது.
பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும், படங்களையும் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் மனிதர்களை போல் படுத்த நிலையில் 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு அதிசய பெருமாள் சிலை காணப்பட்டு வருகின்றது.
நேபால் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புத்தானிகந்தா கோவில். இந்த கோவிலில் உள்ள விஷ்ணு சிலை ஆதிசேஷன் மேல் படுத்துக்கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கிட்டதட்ட 14 அடியில் உயரத்தில் மிகவும் பிரமாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை, எப்படி இவ்வளவு வருடங்களாக நீரில் மிதந்தபடியே உள்ளது என்பது இன்றுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.
7 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னன் இந்த சிலையை நிறுவியதாக வரலாறு கூறுகிறது. இந்த சிலை மிதந்தபடியே இருந்தாலும், இதற்கான அர்ச்சனைகளும், அபிஷேகங்களும் தினமும் நடந்தவண்ணமே உள்ளன. மேலும் நீரில் மிதக்கும் இந்த விஷ்ணுவின் அருளை பெற பக்தர்கள் எப்போதும் இங்கு வந்த வண்ணமே  உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Pages