Breaking

Wednesday 6 June 2018

தேனின்_மருத்துவ_குணங்கள்


தேனின்_மருத்துவ_குணங்கள்
தேனீயின் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
தேனின் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்ததே. பின்வரும் தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்.
கண் பார்வைக்கு
தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.
இருமலுக்கு
சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
ஆஸ்துமா
அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்
இரத்த கொதிப்பு
ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.
இரத்த சுத்திகரிப்பு/கொழுப்பு குறைப்பு
ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.
இதயத்திற்கு டானிக்
அனைஸ் பொடியுடன் (Anise Powder/Yansoun Powder) ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.
தேனை உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
1. தேனை சூடான உணவு பொருட்களுடன் கலக்கக் கூடாது.
2. தேனை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும்.
3. வெப்ப நிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் தேன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
4. தேனை மழை நீர், கடுகு, நெய் மற்றும் காரமான உணவு வகைகளுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது.
தேன் பல மலர்களின் மதுரம் கலந்த ஒரு கலவையே. அதில் நச்சு தன்மை வாய்ந்த மலர்களும் அடங்கும். நஞ்சு பொதுவாக கார மற்றும் உஷ்ண குணங்களையே கொண்டிருக்கும். ஆகவே தேனை கார மற்றும் சூடான உணவு பொருட்களுடன் கலக்கும் போது இந்த நச்சு தன்மைகள் மேலோங்கும் சாத்தியக்கூறு உள்ளது.
நன்றி --- முகநூல் பக்கம் மருத்துவம்
https://www.facebook.com/Makilchimaruththuvam/

No comments:

Post a Comment

Pages